திரு நாச்சிமுத்து -ஒரு இந்திய மாமா
சமீபத்தில் மறைந்த என் மாமா திரு நாச்சிமுத்து இந்திய உறவு முறைகளின் ஆழமான பிணைப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் மாதிரியான மனிதர்கள் இன்று அருகி வருகிறார்கள் . ஆனால் இவரைப்போன்றவர்கள் தான் இந்திய உறவுகளின் வேர்களாய் இருந்து வந்திருக்கிறார்கள். பெற்றோர் , நண்பர்கள் என்கிற உறவுகளுக்கு மத்தியில் இந்த மாதிரி ஒரு உறவின் இடம் முக்கியமானது. என் மாமா என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு துணையாக இருந்திருக்கிறார். என் திருமணம் , வீடு என்று எல்லா முக்கிய முடிவுகளிலும் அவர் பங்கு இருந்திருக்கிறது. தாய்மாமன் என்ற உறவைப்பற்றி அவருக்கு மிக உயர்ந்த அபிப்ராயம் உண்டு . அது ஒரு தெய்வீகமான உறவு என்பார் .அவர் எனக்கு தாய் மாமன் இல்லை . என் தந்தையின் சகோதரியின் கணவர்.ஆனால் ஒரு தாய் மாமன் போல தான் இருந்தார். என் அம்மாவிற்கு சகோதரர்கள் இல்லை. அவர் ஒரே பெண் . என் தங்கை பருவமடைந்த போது யாரிடமோ எனக்கு சீர் செய்ய தாய் மாமன் இல்லை என்று சொன்னார் என்று கேட்டு சண்டைக்கு வந்து விட்டார் . உடனடியாக தேவையான பொருட்களை வாங்கி வந்து சீர் செய்து விட்டு நான் இருக்கும் வரை எதற்கும் கவலைப்படகூடாது : எல்லாவற்றுக்கும் மாமா இருக்கிறேன் என்ற போது அவர் குரலின் அன்யோன்யம் நெஞ்சை தொட்டது. .
சிறிய வயதில் அவர் ராமு என்று கூப்பிடும்போது குரலில் சொட்டும் பிரியம் இப்போதும் நினைவில் தித்திக்கிறது . பிறகு நான் அவர் சகோதரர் மகளை மணந்து மருமகன் முறை ஆனதும் மாப்பிள்ளை என்று கூப்பிட ஆரம்பித்தார் .நீங்கள் என்கிற மரியாதை விளியும் தொடங்கி விட்டது. எவ்வளவு சொல்லியும் மரியாதையை கை விடவில்லை . ஆனாலும் குரலில் சொட்டுகிற பிரியம் மட்டும் குறையவே இல்லை. சாப்பிடும் போது பார்த்து பார்த்து உபசாரம் செய்வார் . மாப்பிளைக்கு அதை எடுத்து வை , இதை எடுத்து வை என்று ஒரே தடபுடல்தான் . அவர் வீடே ஒரு பெரிய ஜங்ஷன் போல இருக்கும் . பொள்ளாச்சிக்கு எதோ வேலையாக வரும் எல்லா உறவினர்களும் அவர் வீட்டிற்கு வராமல் இருக்க முடியாது . வராவிட்டால் கோபித்து கொள்வார். வீட்டில் தினமும் விருந்தினர் இருப்பார்கள் வேலை இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர் சளைக்க மாட்டார் . பார்த்து பார்த்து செய்வார் . வந்து போகிறவர்கள் முகமும் மனமும் நிறைந்திருக்கும்
PLANNING- இல், ORGANIZING- ல் மன்னன் . எந்த வேலை என்றாலும் ஒரு file போட்டு விடுவார். அரசாங்க file போல tag போட்டு பேப்பர் பேப்பராக கோர்த்து வைதுகொண்டே இருப்பார். கால அட்டவணை , பட்ஜெட் , பொறுப்புகளை பகிர்ந்தளித்தல் எல்லாம் பக்காவாக இருக்கும். கணக்குகள் பைசா துல்லியத்திற்கு சரியாக இருக்கும். என் திருமணத்திற்கு , என் வீட்டு வேலைக்கு அவர் தயாரித்து வைத்திருந்த கோப்புகளை பார்த்து வியந்து போனேன் . கொத்தனாருக்கு பஜ்ஜி வாங்கிகொடுத்த செலவு கூட எழுதி வைத்திருந்தார் .
என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் ஜாஸ்தி . அவருடைய எல்லா உறவுகளுக்கும் அப்படிதான் தோன்றும் என்றாலும் என் மீது கொஞ்சம் ஜாஸ்திதான் . ஒருமுறை நானும் சுதாவும் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு வரும்போது அதிகாலை அவர் வீடு முன்னாலேயே பேருந்திலிருந்து இறங்கி விடுவதாக சொன்னேன். எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று கேட்டார் . காலை மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் வந்து விடுவோம் என்று சொன்னேன். காலை மூன்று மணிக்கு வந்து இறங்கியபோது , கொட்டும் பனியில் , கரும் இருளில் அந்த தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சால்வையை போர்த்துக்கொண்டு வரும் பேருந்துகளை பார்த்துகொண்டு நின்றிருந்தார். என்ன மாமா இது என்று கேட்டபோது தூக்கம் வரவில்லை மாப்பிள்ளை என்றார் . மென்மையான குரல் அவருடையது. ஆனால் கேட்கும்போது நமக்காக ஏதும் செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்து விடும். என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது, வீடு வாங்க வைத்தது அந்த பேச்சு தான் .
நான் வேலைக்காக மதுரா வந்தது அவருக்கு வருத்தம் . ஒவ்வொரு வாரமும் போன் செய்யும்போதும் "ஏன் மாப்பிள்ளை , கொஞ்சம் சம்பளம் கம்மியாயிருந்தாலும் இங்கே மாத்திட்டு வந்திருங்களேன் . அப்பா , அம்மா வயசான காலத்திலே தனியாக இருக்காங்களே " என்பார் . கிடைக்க மாட்டேங்குதே மாமா என்று நான் சொல்லும்போது ஒரு கணம் மௌனமாக இருப்பார் . பிறகு பேச்சை மாற்றுவார்.
அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று செய்தி வந்ததும் ஓடினோம். ஒருநாள் அவருடன் ஆஸ்பத்ரியில் இருக்க வாய்ப்பு கிடைத்தது . நீங்க கூட இருந்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்றார். இந்த லிவர் பிரச்சினை இல்லாவிட்டால் இன்னும் பத்து வருடம் இருப்பேன் என்றார். இதுவும் சரியாக போய்விடும் மாமா என்றேன் . எனக்கும் நம்பிக்கை இல்லாமலில்லை என்றார் . ஆனால் அனைத்து நம்பிக்கைகளும் பொய்த்துப்போனது .
இப்போதும் கண்ணை மூடினால் "மாப்பிளை , நம்ம புரோக்கர் ஒரு FIRST CLASS இடம் சொன்னாரு வாங்கி போட்டா ...." என்கிற குரல் கேட்பது போல இருக்கிறது . இனி வாழ்வில் கூட மாமா இருக்க மாட்டார் என்பது ஜீரணிக்க கஷ்டமாக தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக