பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2010

KULIR ... KULIR... PAYANGIRA KULIR...

முதல் முதலாக வட இந்தியாவில் WINTER - ஐ அனுபவிக்கிறேன். குளிர் நல்ல அனுபவம் தான் . சரியான ஆடைகளை சரியான  நேரத்தில் அணிந்துகொண்டால்  பெரிய பிரச்சினை இல்லை. நன்றாக பசிக்கிறது. SIGNATURE விஸ்கியும், முட்டை பொரியலும், சில்லி சிக்கனும் குளிர் நேரத்தில் கொஞ்சம் அதிகம் ருசிக்கத்தான் செய்கிறது. ஆனால் குளிர் நேரத்தில் தனிமை அதிகமாகத்தான் தோன்றுகிறது. எத்தனை ஆடை அணிந்தாலும் சில குளிர்கள் போவதேயில்லை.....

ஜனனியும் கௌதமும் இருக்கிற போட்டோவை DESKTOP -இல் வைத்திருக்கிறேன். ஒரு அற்புதமான புன்னகை கணத்தை கேமரா அழகாக சிறை பிடித்து  விட்டது.  எத்தனை நேரம் பார்த்தாலும் அலுக்காத புன்னகை.....

DYANALINGAMUM VELLIYANGIRI MALAIYUM....

இந்த தடவை ஊருக்குபோயிருந்தபோது ஜக்கி வாசுதேவின் த்யானலிங்கம் போயிருந்தேன். என்ன சொல்ல? நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏதோ கொஞ்சம் இடறுகிற மாதிரி, கொஞ்சம் நாடகத்தனம் ஜாஸ்தியாக இருக்கிற மாதிரி தோன்றுகிறது.முழுமையாக ஒன்ற முடியவில்லை. இந்திய ஆன்மிகத்தை புத்திசாலித்தனமாக கேப்சுலில்அடைத்து  விற்கிறார்கள்  என்று   தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. காப்பு கயிறு 10  ரூபா , திருநீறு 30 ரூபா....   .  ஜக்கி வாசுதேவின் ஒரு பேட்டி படித்தேன். உண்மையான த்யானலிங்கம் வெள்ளயங்கிரி மலைதான்.  அங்கே இருக்கிறதில்  கொஞ்சம் எடுத்து இந்த த்யானலிங்கம் அமைத்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.  வெள்ளியங்கிரி மலை தான் உண்மையான  த்யான லிங்கம் என்பதை  உணர்ந்திருக்கிறார்  என்பதில்  சந்தோசம்.  அவர் முயற்சியை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் இதை ஒரு சுற்றுலாதலமாக மாற்றி  வெள்ளிங்கிரி மலையின் அமைதி கொஞ்சம் குலையவும் காரணமாயிருந்திருக்கிறார்  என்றும் தோன்றுகிறது.   ஆனால்  RESORT அமைப்பதை விட , AMUSEMENT PARK  அமைப்பதை விட  இது பரவாயில்லை.   வார்த்தைகள். கணேசமூர்த்தி  அருகில்  தாடிகரடு  என்கிற ஊருக்குபோகிற சாலையில் நடந்து பாருங்கள் என்று அழைத்துப்போனார். அற்புதமான அனுபவம். ஒரு மழை பெய்து ஓய்ந்த மாலைப்பொழுது. ஒருபுறம் ஆழ்ந்த மௌனத்தில்  வெள்ளியங்கிரி மலை... மறுபுறம் கால்வாயில் சிரித்துக்கொண்டே ஓடும் நீர் .சல சல என்று கால்வாயில் ஓடும் நீரின் சப்தத்திற்கு  ஒரு ரிதம் உண்டு.  அது அந்த மௌனத்திற்கு இணையானது. சுற்றிலும் அழகிய வயல்கள். அரிதாகவே தென்படுகிற மனிதர்கள். எதோ ஒரு பழங்குடி கிராமத்திற்கு போகிற பாதை. அந்த ஒரு மணி நேர நடை தருகிற  அனுபவத்தை பத்து வருடம் த்யானலின்கத்தில் இருந்தாலும் பெறமுடியாது. அதுவும் எங்காவது அமர்ந்து அந்த மலையை பார்த்தாலே மனதை ஏதோ செய்கிறது!