பக்கங்கள்

சனி, 23 அக்டோபர், 2010

EN MUTHAL KAADALI

நல்ல புத்தகங்கள் ஒரு மாயலோகம். படிப்பின் ஈர்ப்பு ஒரு புதைகுழியை போன்றது. படிப்பின் சுவை மனதில் ஊறிப்போனால் திரும்பவே முடியாது. ஒரு வாசகனுக்கு ஒரு நல்ல புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கும் இன்பம் வேறு எதிலுமே கிடைக்காது. எத்தனை முறை KARAMAZOV BROTHERS படித்தாலும், ஒவ்வொரு தடவையும் DOESTOVESKY புது புது  உலகங்கள் காட்டிக்கொண்டே இருக்கிறார். எத்தனை முறை படித்தாலும் CITADEL  அலுக்கவே மாட்டேன்கிறது . சில பக்கங்களை படிக்கும்போது உடல் சிலிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை. JOB SATISAFACTION  - நின் அற்புத உதாரணம் CITADEL . ஆண் பெண் உறவுகளின் நுண்ணிய முடிச்சுகளை அற்புதமாக சித்தரிக்கும் ஜானகிராமனின் மோகமுள் எதனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு  இனிய பாடல். அசோக மித்திரனின் சிறுகதைகளை படித்து முடித்ததும் அவை மனதில் எழுப்பும் உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு தாங்க முடியாத துயரத்தை எளிமையான வார்த்தைகளில் எப்படி இவரால் எழுப்ப முடிகிறது என்று வியந்து கொண்டே இருப்பேன். சுந்தர ராமசாமியின் ஜே ஜே  சிலகுறிப்புகள் தமிழ் நடையின் ஒரு சிகரம் என்றே சொல்வேன்.  ஆண் பெண் உறவுகளின் மென்மையான உணர்வுகளை சித்தரிப்பதில் மற்றுமொரு பிதாமகன் கு.பா. ரா. லா. சா.ரா வின் வார்த்தை ஜாலம், சுஜாதாவின் ஜெட் எழுத்து, WODEHOUSE -ன் மெல்லிய புன்னகையை வரவைக்கும் COMDEDY , SHERLOCK HOLMS -ன் சுவாரசியம், கிப்ரானின் கவித்துவம் , O .HENTRY-ன் முத்தாய்ப்பு என  என்னை கட்டிபோட்ட எழுத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். எதனை எழுதினாலும், முக்கியமான நிறைய புத்தகங்களை விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. பாருங்கள், என் பாரதியை கூட விட்டு விட்டேன். எத்தனை எழுதினாலும் என் முதல் காதலி எழுத்தின் மீதான என் ஈர்ப்பை முழுமையாக எழுத என் எழுத்தால் முடியவில்லை.

கருத்துகள் இல்லை: