பக்கங்கள்

வியாழன், 21 அக்டோபர், 2010

ISAI PADA VAALTHAL

ஷாஜியின் இசை பற்றிய கட்டுரைகள் நிச்சயம் ஒரு வெற்றிடத்தை சமன் செய்கிறது. S . ஜானகியையும், A .M . ராஜாவையும்,  மலேசியா வாசுதேவனையும்  எத்தனை முறை கேட்டிருந்தாலும் , ஷாஜியை படித்தபிறகு மீண்டும் கேட்கும்போது புதிய ஆழம் கிடைக்கத்தான் செய்கிறது., நம் வாழ்வோடு ஒன்றி கலந்துவிட்ட திரை இசை பற்றியோ அந்த குரல்களைபற்றியோ ஆழமான கட்டுரைகள் ஷாஜிக்கு முன் தமிழில் இல்லை. ஷாஜியை படித்தபிறகு ஜானகியின் குரலிலும் , சலீல் சௌதரியின் இசையிலும் புதிய அர்த்தங்கள் புலனாகிறது.  அதுவும் மலேசியா வாசுதேவனைப் பற்றிய கட்டுரையை படித்தபிறகுதான்  அவர் பாடிய எத்தனையோ அற்புதமான பாடல்களை அவர்தான் பாடினார் என்று தெரியாமலே ரசித்து கேட்டுகொண்டிருந்திருக்கிறோம்  என்பதை உணர முடிகிறது.  ஆனால்  எல்லா இளையராஜாவின் ரசிகர்களைப் போலவே , அவரைப் பற்றிய கட்டுரையை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதில் அதிகம் சாரம் இல்லை என்பது மட்டுமல்ல  இளையராஜா ஒரு நல்ல மனிதர் அல்ல என்று நிரூபிக்க ஷாஜி முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது அவர் இசையின் மேதமையை குறைக்க சரியான காரணம் என்று தோன்றவில்லை. அந்த கட்டுரையை பற்றி இணையதளங்களில்  வந்த பல ஆவேசமான கட்டுரைகள் ஒன்றையே நிச்சயிக்கிறது. இளையராஜா பலரின் வாழ்வையும் ரொம்பவே பாதித்திருக்கிறார். மனசு அலை பாய்கிரபொழுது , மனசு கனமாகி இருக்கிறபொழுது, சந்தோசமாய் இருக்கிறபொழுது ராஜா கூடவே இருந்திருக்கிறார்.  எனக்கே இங்கே இந்த மொழி தெரியா காட்டில் ,  தனிமைக் கனங்களில், கோடையில் மழை வரும், வசந்தகாலம் மாறலாம், எழுதிசெல்லும் விதியின் கைகள் மாறுமோ என்கிற ஜெயிசியின் சோகம் கலந்த குரலை கேட்கும்போது மனதை எதோ செய்யத்தான் செய்கிறது.  பூங்கதவே தாள் திறவாய், பருவமே புதிய பாடல் பாடு , பூவே செம்பூவே, மௌனமான நேரம் போன்ற எண்ணற்ற பாடல்களில்  இளையராஜாவின்  இசைக்கோலங்கள்  மனதில் மீட்டுசெல்கிற  உணர்வுகளுக்கு ஈடு ஏது?

கருத்துகள் இல்லை: