பக்கங்கள்

சனி, 4 செப்டம்பர், 2010

ORU SIRU KANGU ADI MANATHIL

இப்போதும் கவிதை எழுதுகிறாயா என்று யாராவது கேட்டால் சங்கடமாய் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  ஏதோ ஓன்று மூளைக்குள்  அடைத்துகொண்டது போல்ஏதும் எழுத வரமாட்டேன்கிறது.  ஆனால்படிக்க படிக்க  என்றைக்குதான்  எழுதினேன் கவிதைஎன்றும் தோன்றுகிறது! நல்ல கவிதைகளை, நல்ல சிறுகதைகளை, நல்ல நாவல்களை படிக்கும்போது நான் எழுதவேண்டியதை இவர்கள் எழுதி விட்டார்களே என்ற பொறாமைதான் முதலில் வருகிறது. என்றாலும் நல்ல எழுத்து ஒரு வாசகனாய் ஈர்த்து பிறகு படைப்பாளியாக பிரம்மிக்க வைத்து தூக்கம் இழக்க வைக்கிறது. எழுத்தின் ஈர்ப்பு இன்று வரை குறையவேயில்லை. படைப்பின் ஜ்வாலையும் அடிமனதில் சிறு கங்காய்..... என்றேனும் தழலாய்  பற்றி எரியலாம்.. யாருக்கு தெரியும்...! கால தேவன் அனுமதிக்கவேண்டும்.... !

அக்னி குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூபென்றுமுண்டோ

என்று பாரதி பாடியது மட்டும் மனதில் அலைமோதிகொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: